thalib Engineer/Designer

Farming Peanut aka Groundnut

2016-10-30

ஒரு ஏக்கர் பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்வது குறித்து தகவல்கள் பாடமாக இங்கே. ஒரு ஏக்கர் விதைப்புக்கு 40 கிலோ விதைக்கடலை தேவைப்படும்.

Seeding Priming

விதைநேர்த்தி செய்வதால் வேர் அழுகல் உள்ளிட்ட நோய்கள் வராது.

  • ஓலைப்பாய் அல்லது சணல் சாக்கை நிழலில் விரித்து, அதில் 40 கிலோ விதைக்கடலையைப் பரப்பிவிட வேண்டும்.
  • விதைக்கடலையின் மீது 2 லிட்டர் பஞ்சகவ்யாவைத் தெளித்து, புரட்டிவிட வேண்டும்.
  • 2 மணி நேரம் வைத்திருந்து பிறகு விதைக்க வேண்டும்.

Note: உடைத்த பருப்பை வாங்கி விதைக்கக் கூடாது. அவற்றுக்கு முளைப்புத்திறன் குறைவாக இருக்கும். அதனால், முழுக்கடலையாக வாங்கி நாமே பக்குவமாக உடைத்து விதைக்கும்போது சேதாரத்தைத் தவிர்க்க முடியும்.

விதைத்தல்

  • நிலக்கடலைக்குச் சித்திரை, வைகாசி, ஆடி, கார்த்திகை ஆகிய பட்டங்கள் ஏற்றவை. இறவையில் வைகாசிப் பட்டத்தில் சாகுபடி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • சித்திரை மாதம் ஐந்து கலப்பை மூலம் உழவு செய்து, எட்டு நாட்கள் காயவிட்டு அடுத்த உழவு ஓட்ட வேண்டும். சித்திரை உழவில் மண்ணில் உள்ள புழுக்கள், பூச்சிகள் வெப்பத்தால் அழிந்துவிடும்.
  • வைகாசி தொடக்கத்தில், ஒரு ஏக்கர் நிலத்துக்கு 2 டன் என்ற கணக்கில் தொழுவுரத்தைக் கொட்டி டில்லர் மூலம் உழ வேண்டும்.
  • பிறகு 10 அடி நீளம் 8 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி. ஒரு ஏக்கருக்கு 260 பாத்திகள் வரை எடுக்கலாம்.
  • பாத்திகளில் முக்கால் அடி இடைவெளியில், விதைநேர்த்தி செய்யப்பட்ட நிலக்கடலை விதைகளை…
  • ஒவ்வொரு விதையாக ஊன்றித் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

தண்ணீர பாய்ச்சல்

  • தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.
  • கடலையைப் பொறுத்தவரை வாடவிட்டுத் தண்ணீர் பாய்ச்சினால்தான் மகசூல் நன்றாக இருக்கும்.
  • விதைத்த 4-ம் நாள் முளைப்பு எடுக்கும்.
  • 20 மற்றும் 35-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும்.
  • இரண்டாவது களை எடுப்பின்போது, 40 கிலோ கடலைப்பிண்ணாக்கை நிலம் முழுவதும் தூவ வேண்டும்.
  • 30-ம் நாளுக்கு மேல் பூ எடுக்கும். இந்த நேரத்தில் சிவப்புக் கம்பளிப்புழு, அசுவினி ஆகிய பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு.
  • அதனால் 30-ம் நாளுக்கு மேல் வாரம் ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி இஞ்சி-பூண்டு கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும்.
  • 40-ம் நாள், செடிகளின் தூர்ப் பகுதியில் மண் அணைத்துவிட வேண்டும். அப்போதுதான் திரட்சியாக கடலைகள் கிடைக்கும்.
  • 45-ம் நாள் செடிகளின் நடுப்பகுதியைக் கால்களால் மெதுவாக மிதித்துவிட வேண்டும். அப்போதுதான் வேர்கள் பிரிந்து கடலைகள் மண்ணுக்குள் இறங்கும்.
  • 100-ம் நாளுக்கு மேல், கடலைச் செடியின் மேற்பகுதி இலைகள் மஞ்சள் நிறத்துக்கு மாறி கறும்புள்ளிகள் விழும். அந்த நேரத்தில் சில செடிகளைப் பிடுங்கி முதிர்ச்சி அடைந்திருப்பதை உறுதி செய்து, தண்ணீர் பாய்ச்சி, 3 நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம்.
  • 110 நாளுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும்.

Fertizlier

  • விதைத்த 20-ம் நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும்.
  • 45-ம் நாளுக்கு மேல், வேர்களில் கடலை உருவாகும்.
  • 45, 55 மற்றும் 65-ம் நாட்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மீன் அமினோ அமிலம் மற்றும் சிறிது காதி சோப் கலந்து கைத் தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இதனால் கடலைச் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும். திரட்சியாகக் காய் பிடிக்கும்.

Comments